ராணுவ கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான'சீட்' எண்ணிக்கை அதிகரிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 4, 2020

ராணுவ கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான'சீட்' எண்ணிக்கை அதிகரிப்பு

 ராணுவ  கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான'சீட்' எண்ணிக்கை அதிகரிப்புஎன்.டி.சி., எனப்படும் தேசிய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான, 'சீட்' எண்ணிக்கை, 100ல் இருந்து, இரண்டு ஆண்டுகளில், 120 ஆக உயர்த்தப்பட உள்ளது' என, மத்திய ராணுவ செயலர், அஜய் குமார் கூறினார்.


அவர் கூறியுள்ளதாவது:


தற்போது இந்தக் கல்லூரியில், 100 இடங்களில், 25 இடங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மாலத்தீவுகள் உட்பட, 21 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர்


. மீதமுள்ள, 75 இடங்கள், நம்முடைய படைகளின் மூத்த அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.


தங்களுடைய மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என, பல நாடுகள் தொடர்ந்து கேட்டு வருகின்றன. அதனால், இந்தக் கல்லூரியில் சேருவதற்கான, சீட் எண்ணிக்கையை, வரும் ஆண்டில், 110 ஆகவும், அதற்கடுத்த ஆண்டு, 120 ஆகவும் உயர்த்த உள்ளோம். 

இதன் மூலம், நேபாளம், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment