அசோக்நகர் அரசு பள்ளி மாணவியருக்கு சீட் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 18, 2020

அசோக்நகர் அரசு பள்ளி மாணவியருக்கு சீட்

 அசோக்நகர் அரசு பள்ளி மாணவியருக்கு சீட்தமிழக அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், சென்னை, அசோக் நகர் அரசு பள்ளி மாணவியர், ஐந்து பேர், நேற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.மருத்துவ படிப்பில் சேர, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.அதன்படி, சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்த, 11 பேர், தகுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், ஐந்து மாணவியர், நேற்று நடந்த முதல் நாள் கவுன்சிலிங்கில் கல்லூரிகளில் சேர இடங்கள் பெற்றனர்.'


நீட்' தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கை விண்ணப்ப பதிவுகளுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமையிலான குழு உதவியது. அவர்களுக்கு, மாணவியர் மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்


தற்போது, மருத்துவ படிப்பில் இடங்கள் பெற்ற மாணவியரில் இருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்து, 'நீட்' தேர்வு பயிற்சி பெற்றவர்கள்.


மாணவியர் விபரம்:


பெயர் /-நீட் மதிப்பெண்-/ கல்லூரிபத்மபிரியா- - 361- - சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி


அப்ரின் சிபாயா- - 340- - சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி


கோவர்தினி - -325 - -செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி


பிரேமா- - 270- - -வேலூர் மருத்துவ கல்லூரி


பவதாரிணி- - 248 -- திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி

No comments:

Post a Comment