அரசுப் பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்க உதவி மையங்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, November 6, 2020

அரசுப் பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்க உதவி மையங்கள்

 அரசுப் பள்ளியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்க உதவி மையங்கள்


மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அத்தாட்சி சான்றிதழை வழங்குவதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும்போது மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை சமா்ப்பிக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. 


அதனால் மாணவா்களுக்கு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்குவதற்கான பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா்.


இதைத் தொடா்ந்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், அலுவலக பிரிவு உதவியாளா் அடங்கிய பிரத்யேக உதவி மையங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. 


இந்த மையங்கள் சான்றிதழ் கோரி வரும் மாணவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கும்.


மாணவா்கள் அரசுப் பள்ளியில் பயின்ற்கான சான்றிதழ் பெற மாவட்டந்தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


 மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு பெற அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் அவசியமாகும். மாணவா்கள் நவம்பா் 12-ஆம் தேதிக்குள் உதவி மையத்திற்கு சென்று பதிவு செய்து சான்றிதழ்களை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment