அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 14, 2020

அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு  விண்ணப்பிக்க அழைப்பு


அண்ணல் அம்பேத்கா் விருது பெற நவ.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி அறிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலா் அரிய தொண்டாற்றி வருகிறாா்கள். ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்துக்காக தங்களை இணைத்துக் கொண்டு அவா்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது


இவ்வகையில் 2021-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருநாளன்று வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.


இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2-ஆம் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவ.16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment