மாணவர்கள், தேர்வர்கள் மின் ரயிலில் பயணிக்கலாம்
மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், புறநகர் மின்சார ரயில்களில், இன்று முதல் பயணிக்க, தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புறநகர் மின்சார ரயில்களில், கூட்ட நெரிசல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், பெண்கள் பயணிக்க, இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள், தேர்வர்கள், நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள் மின்சார ரயில்களில் பயணிக்கலாம்.
இதற்கு உரிய அதிகாரிகளிடமிருந்து, அனுமதி கடிதம் பெற வேண்டும்.
அதேபோல, அழுகும் பொருட்களை விற்பனை செய்யும், பெண் வியாபாரிகள், மாதாந்திர டிக்கெட் அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று பயணிக்கலாம். பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களும், இன்று முதல் மின்சார ரயில்களில் பயணிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment