மருத்துவ கல்லூரி கட்டணம் கட்ட தவிக்கும் அரசு பள்ளி மாணவர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 24, 2020

மருத்துவ கல்லூரி கட்டணம் கட்ட தவிக்கும் அரசு பள்ளி மாணவர்

 மருத்துவ கல்லூரி கட்டணம் கட்ட தவிக்கும் அரசு பள்ளி மாணவர்


திருமங்கலம் அருகே மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த வைரமுத்து மகன் முத்துக்குமார் பிளஸ் 2 தேர்வில் 495 மதிப்பெண் பெற்றார். 


நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண் 161 பெற்றுள்ளார். 


தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இவருக்கும் மருத்துவ கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்தது. நவ., 19 ல் நடந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்றார்.


அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. தனியார் கல்லூரி கலந்தாய்வில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் ரூ.25 ஆயிரம் கட்ட முடியாததால் இவர் எந்த கல்லூரியையும் தேர்ந்தெடுக்கவில்லை.


தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என நவ., 20 ல் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்


. ஆனால் நவ., 19ல் மருத்துவ கலந்தாய்வில் கலந்த கொண்ட முத்துக்குமார் அரசின் உதவியை பெற முடியாத நிலையில் உள்ளார். கலந்தாய்வில் கலந்து கொள்ளாததால், கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையும் உள்ளது.


கலெக்டர் அன்பழகன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் நவ., 19 கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த முடியாமல் திரும்பியுள்ளனர்.


 அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர் மூலம் மருத்துவ கலந்தாய்விற்கென உள்ள தனி அதிகாரியை தொடர்பு கொண்டால், விரைந்து தீர்வு கிடைக்கும் என்றார்.


 ஏழ்மை நிலையில் உள்ள தனக்கு அரசு உதவுமாறு முத்துக்குமார் கேட்டு கொண்டுள்ளார். 


தொடர்புக்கு 88702 88052முத்துக்குமார்

No comments:

Post a Comment