தமிழகத்தில் பொது விடுமுறை நீட்டிக்கப்படுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 24, 2020

தமிழகத்தில் பொது விடுமுறை நீட்டிக்கப்படுமா?

 தமிழகத்தில் பொது விடுமுறை நீட்டிக்கப்படுமா?


நிவர் புயல் எதிரொலி: நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் - முதல்வர்


நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்


நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 


மேலும், நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.


மேலும், புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது. 


அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டுமே நாளை பணிபுரிவார்கள். மக்களுக்காக அரசு இருக்கிறது. எதிர்கட்சிகள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள். 


நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படுவது குறித்து அரசு முடிவு செய்யும். புயல் கரையை கடக்கும்போது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment