உலகளவில் சிறந்த விஞ்ஞானியாக தமிழகத்தை சேர்ந்த இவர் தேர்வு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 18, 2020

உலகளவில் சிறந்த விஞ்ஞானியாக தமிழகத்தை சேர்ந்த இவர் தேர்வு

 உலகளவில் சிறந்த விஞ்ஞானியாக தமிழகத்தை சேர்ந்த இவர் தேர்வு


உலக அளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பார்மஸி துறையில் கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டைச் சேர்ந்த அழகர்சாமியும் இடம் பிடித்துள்ளார்.


கோவை மருத்துவ கல்லூரியில் மருந்தாளுனர் டிப்ளமோ படித்த இவர், பின்னர் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பையும் முடித்தார். தற்போது ஐதராபாத் எம்.என்.ஆர்., பார்மஸி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல்வர் மற்றும் இயக்குனராக உள்ளார்.


 அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலை சமீபத்தில் 22 துறைகளில் உலகின் சிறந்த ஒரு லட்சம் விஞ்ஞானிகளை பட்டியலிட்டது. அதில் இவர் 1561வது இடத்தில் உள்ளார்.


117 ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் முதல் இடத்திலும், இந்திய அளவில் 22வது இடத்திலும் தேர்வாகி உள்ளார்.


 இவர் புதிய மருந்துகளை தயாரித்து அவற்றை விலங்குகளில் பரிசோதித்து வருகிறார். இவரிடம் பயின்ற பலநூறு மருந்தாளுனர்கள் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

No comments:

Post a Comment