"பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ! - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 4, 2020

"பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

 "பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !


வங்கியில் பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை" என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அமித் குமார் தாஸ் என்பவர், தனது பட்டப்படிப்பை மறைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பியூன் வேலைக்கு சேர்ந்துள்ளார்.


இந்த நிலையில், அமித் குமார் தாஸ் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில், அவரது படிப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்தது.


அப்போது, பட்டப் படிப்பை மறைத்து அமித் குமார் தாஸ் வேலையில் சேர்ந்தது தெரிய வந்தது.


இதனால், பணியில் இருந்து வங்கி நிர்வாகம் அவரை நீக்கியது. இதனை எதிர்த்து ஒடிசா உயர்நீதிமன்றத்தில் அமித் குமார் தாஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பணி வழங்க உத்தரவிட்டது.


இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வங்கி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.


 இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது, பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை என்று வங்கி நிர்வாகம் தெரிவித்திருந்த போதிலும், குமார்தால் தனது படிப்பை மறைத்து வங்கியில் சேர்ந்தது தவறான செயல். இது தொடர்பாக ஒடிசா உயர்நீதிமன்றம் அளித்த இரண்டு தீர்ப்புகளும் தவறானது. 


எனவே, பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை என வங்கி நிர்வாகம் முடிவு செய்தது சரியே என தீர்ப்பு வழங்கியது.

No comments:

Post a Comment