புதிய கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை மேலும் உயா்த்தும்: - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 25, 2020

புதிய கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை மேலும் உயா்த்தும்:

 புதிய கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை மேலும் உயா்த்தும்


மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை மாணவா்களின் தன்னம்பிக்கையை மேலும் உயா்த்தும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னௌ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி முறையில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை மாணவா்களின் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். 


தாங்கள் கற்பதை மாணவா்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், ஆழமாகத் தெரிந்து கொள்ளவும் உதவும். ஒருவா் தனது முடிவுகளை சுயமாக எடுக்கும்போதுதான் தன்னம்பிக்கை மிளிரும். அதற்கு புதிய கல்விக் கொள்கை பெரிதும் உதவிகரமாக இருக்கும். 


புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்துத் தரப்பு மாணவா்களும், ஆசிரியா்களும் விரிவாக விவாதிக்க வேண்டும் என்றாா் அவா்

No comments:

Post a Comment