ஊரடங்கு குறித்து தலைமை செயலாளர் விளக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, November 8, 2020

ஊரடங்கு குறித்து தலைமை செயலாளர் விளக்கம்

 ஊரடங்கு குறித்து தலைமை செயலாளர் விளக்கம்


கொரோனாவை கட்டுக்குள் வைக்க, முழு ஊரடங்கு அவசியமில்லை; தொற்று பாதிப்பு பகுதிகளை தனிமைப்படுத்தி, தீவிரமாக கண்காணித்தாலே போதும்,'' என, தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.


கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் சண்முகம் தலைமை வகித்தார்.குறையவில்லைபின், நிருபர்களிடம் சண்முகம் கூறியதாவது:


தமிழகத்தில் கொரோனா தொற்று, 3 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. 


கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையவில்லை.அடுத்த, 20 நாட்கள், மிக முக்கியமான காலக்கட்டம். பண்டிகை காரணமாக, மக்கள் கூட்டம், கூட்டமாக கடை வீதிகளுக்கு செல்கின்றனர். நோய் தொற்று தீவிரத்தை உணர்ந்து, பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.ஆய்வில், சென்னை உட்பட ஒரு சில இடங்களில் மட்டுமே, 30 சதவீதம் பேருக்கு உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. 


50 முதல் 60 சதவீதத்தினருக்கு நோய் எதிர்ப்பு சக்கி உருவாகியிருந்தால் மட்டுமே, மீண்டும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூற முடியும்.தீபாவளி பண்டிகைக்கு பின், தொற்று பரவல் அதிகரிக்கவில்லை எனில், அடுத்தகட்ட தளர்வு அறிவிக்கப்படும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பான ஆய்வுகள் நடக்கின்றன; விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தேவையில்லை. தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தினாலே போதுமானது. 


கொரோனா பாதிப்பால், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.விதிமுறைகுணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கும், நுரையீரல் பாதிப்பு சீராவதற்கு காலதாமதம் ஆகும். 


கோவை, இ.எஸ்.ஐ., உட்பட ஒரு சில மருத்துவமனைகளில், 'கொரோனா பின் கவனிப்பு மையம்' ஏற்படுத்தப்பட உள்ளது. விதிமுறைகளை, பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment