யோகா, இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 25, 2020

யோகா, இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 யோகா, இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு


நிவர் எதிரொலியாக யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன


மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.


 நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படும் இப்படிப்புகளுக்காக சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.


இந்நிலையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


நிவர் புயலால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment