ஊரக துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 6, 2020

ஊரக துறையில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

 ஊரக துறையில் காலி பணியிடங்களை நிரப்ப  தமிழக அரசு உத்தரவு


ஊரக வளர்ச்சி துறையில், பொறியியல் பிரிவில், பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை, நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதம்:மாவட்டத்தில் உள்ள, பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்களை, நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப, நடவடிக்கை எடுக்கவும்.


இப்பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படுபவர், நியமன ஆண்டில், ஜூலை, 1ல், 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். முழு நேரம்; பகுதி நேரமாக, சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்; தொலை துார கல்வி முறை ஏற்கப்படாது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன சுழற்சி அடிப்படையில், 1:5 விகிதாச்சாரப்படி, தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் பெறப்பட வேண்டும்.


மேலும், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் பெற வேண்டும்.


தகுதியானவர்களை தேர்வு செய்ய, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இடம் பெற்ற குழு அமைக்க வேண்டும்.


இக்குழு, விண்ணப்பதாரர்களின் தொழில்நுட்ப அறிவை பரிசோதிக்கும் வகையில், 100 மதிப்பெண்களுக்கு, கொள்குறி வகை போட்டித் தேர்வை நடத்தி, இனச்சுழற்சி மற்றும் மதிப் பெண் அடிப்படையில் தேர்வு செய்து, கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.தேர்வு செய்யப் பட்ட நபர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், பணி நியமன ஆணை வழங்க வேண்டும்


.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.இதன்படி, சென்னை தவிர்த்து, 36 மாவட்டங்களில், 777 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment