நீர் மேலாண்மையில் முதலிடம் தேசிய விருதுக்கு தமிழகம் தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 7, 2020

நீர் மேலாண்மையில் முதலிடம் தேசிய விருதுக்கு தமிழகம் தேர்வு

 நீர் மேலாண்மையில் முதலிடம் தேசிய விருதுக்கு தமிழகம் தேர்வு


நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில், தமிழகம் முதல் மாநிலமாக, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.


மத்திய ஜல்சக்தி அமைச்சகம், நீர்வளங்களை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதில் சிறப்பாக பணியாற்றும், மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை தேர்வு செய்து, விருதுகளை வழங்குகிறது.அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டது. 



நீர் மேலாண்மையில்,சிறந்து விளங்கும்முதல் மாநிலமாக, தமிழகம் தேர்வு செய்யபட்டுள்ளது. மஹாராஷ்டிரா இரண்டாமிடத்தையும், ராஜஸ்தான் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன


. சிறப்பு பிரிவில், மிசோரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.தென் மாநிலங்களில், ஆறுகள் புனரமைப்பு பணியில், சிறந்த மாவட்டங்களாக, வேலுார் மற்றும் கரூர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.


நீர் பாதுகாப்பு பிரிவில்,ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் முதலிடத்தையும்: தமிழகத்தின் பெரம்பலுார் மாவட்டம், இரண்டாமிடத்தையும் பெற்று உள்ளன.


கிராம ஊராட்சிகளில், தூத்துக்குடி மாவட்டம்,சாஸ்தாவினாத்துார் ஊராட்சி முதலிடம் பிடித்துள்ளது. மாநகராட்சிகளில், மதுரை இரண்டாமிடம் பிடித்துள்ளது


.'நீர் மேலாண்மையில்,2019ம் ஆண்டின் சிறந்த மாநிலமாக, ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதை, தமிழக அரசு பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என, முதல்வர் பழனிசாமி ., தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment