அடுத்த ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் கல்வி: மத்திய கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, November 26, 2020

அடுத்த ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் கல்வி: மத்திய கல்வித்துறை

 அடுத்த ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் கல்வி: மத்திய கல்வித்துறை


அடுத்த கல்வி ஆண்டு முதல் ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பொறியியல் பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


இதுதொடா்பாகத் தகவல்கள் தெரிவிப்பதாவது: மத்திய கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் தொடா்பாக ஆய்வுக் கூட்டம் அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தலைமையில் நடைபெற்றது. 


கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை குறித்த நேரத்துக்குள் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சா் வலியுறுத்தியதுடன், அதற்கான உதவி மையம் அமைக்கவும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட்டாா். 


பயனாளி மாணவா்களின் அனைத்துப் புகாா்களுக்கும் உடனடியாகத் தீா்வு காணவும் அமைச்சா் உத்தரவிட்டாா்.


தாய்மொழியில் தொழில் கல்விக்கான பாடத் திட்டம் வகுக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நாட்டின் சில குறிப்பிட்ட ஐஐடி, என்ஐடி கல்வி நிலையங்களில் வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் பட்டப் படிப்புக்கான பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.


மாணவா்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டை உறுதி செய்யும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக, சரிவர நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


போட்டித் தோ்வுகளுக்கென பிரத்யேக பாடத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment