புதிய தகவல்கள், வசதிகளுடன் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வடிவமைப்பு - சிறப்பம்சங்கள் என்னென்ன..? - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 4, 2020

புதிய தகவல்கள், வசதிகளுடன் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வடிவமைப்பு - சிறப்பம்சங்கள் என்னென்ன..?

 புதிய தகவல்கள், வசதிகளுடன் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வடிவமைப்பு - சிறப்பம்சங்கள் என்னென்ன..?


எட்டு வருட காலத்திற்கு பிறகு தற்போது புதுப்பொலிவுடன் மாற்றி வடிவமைக்கப்பட்டு, அதே www.tnpsc.in முகவரியில் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கான பல்வேறு புதிய தகவல்கள் மற்றும் வசதிகளுடன் புதிய இணையதளத்தை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் இன்று துவங்கி வைத்தார்.2012-லிருந்து 4.8 கோடிக்கும் மேற்பட்ட நபர்களால் பார்வையிடப்பட்ட www.tnpsc.in என்ற இணைய முகவரியில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் எட்டு வருட காலத்திற்கு பிறகு தற்போது புதுப்பொலிவுடன் மாற்றி வடிவமைக்கப்பட்டு, அதே www.tnpsc.in முகவரியில் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.புதிததாக துவங்கி வைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் சிறப்பம்சங்கள்


தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் அனைத்து தகவல்கள்


மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள இந்திய அரசு இணையத்தளங்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றி இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளதுவிண்ணப்பதாரர்களுக்குத் தேவையான எந்த ஒரு தேர்வு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் தேர்வு தகவல் பலகை என்ற பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது


பார்வை குறைபாடு உள்ளவர்களும் தமக்கு தேவையான விவரங்களை தாங்களே எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த இணையதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் பின்னூட்டம் (Feedback) அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment