மாநில செஸ் போட்டியில் தங்கம்: பார்வையற்ற ஆசிரியை சாதனை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, November 7, 2020

மாநில செஸ் போட்டியில் தங்கம்: பார்வையற்ற ஆசிரியை சாதனை

 மாநில செஸ் போட்டியில் தங்கம்: பார்வையற்ற ஆசிரியை சாதனை


பந்தலுார் அருகே, எருமாடு பகுதியை சேர்ந்த பார்வையற்ற ஆசிரியை ஒருவர் செஸ் போட்டியில், தமிழக அளவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, எருமாடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தையல் தொழில் செய்து வரும் இவர், ஒரு விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டதால், நடக்க முடியாத நிலையில் உள்ளார்.


 இவரது, மகள் அன்பரசி~,26, பி.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், செஸ் போட்டிகளில் திறமையாக விளையாடி பரிசுகளை பெற்று வருகிறார்.


 பார்வையற்றவர்களுக்கான, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் செஸ் சங்கம் வழிகாட்டுதலுடன், கடந்த, 2ம் தேதி நடந்த, தேசிய ஆன்லைன் செஸ் போட்டியில், பங்கேற்றுள்ளார்.


 இந்த போட்டியில் இவர் பங்கேற்ற குழு வென்றதுடன், தனிநபர் பிரிவில் மாநில அளவிலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.


அன்பரசி கூறுகையில், ''சர்வதேச அளவில், பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்று, இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment