கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கல்வித்துறையினருக்கு CEO பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கினார் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, November 4, 2020

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கல்வித்துறையினருக்கு CEO பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கினார்

 கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கல்வித்துறையினருக்கு CEO பாராட்டு  மற்றும் சான்றிதழ்  வழங்கினார்


செஞ்சி பகுதியில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கல்வித்துறையினரை பாராட்டி சி.இ.ஒ., சான்றிதழ் வழங்கினார்.


கொரோனா ஊரடங்கு காலத்தில் செஞ்சி பகுதியில் சிறப்பாக செயல்பட்ட கல்வித்துறையை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் சுப்புராயன் தலைமை தாங்கினார். அன்னமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனுசாமி முன்னிலை வகித்தார்.


 பள்ளி துணை ஆய்வாளர் விநாயக மூர்த்திவரவேற்றார். செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் குமரவேல், 130 மாணவர்களை பள்ளியில் புதிதாக சேர்த்த மழுவந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி,சாரண சாரணிய மாணவர்களுக்கு மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ள களையூர் ராஜாதேசிங்கு பப்ளிக் ஸ்கூல் மாணவி ஸ்ரீநிஷா ஆகியோரை பாராட்டி சி.இ.ஓ., முனுசாமி சான்றிதழ்களை வழங்கினார்.


பி.டி.ஓ.,அறவாழி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment