கல்லூரிகள் திறப்பதற்கான UGC வெளியிட்டுள்ள வழிமுறைகள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, November 9, 2020

கல்லூரிகள் திறப்பதற்கான UGC வெளியிட்டுள்ள வழிமுறைகள்

 கல்லூரிகள் திறப்பதற்கான UGC வெளியிட்டுள்ள வழிமுறைகள்


பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளின்படி படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன. 


தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. 


இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், நிபந்தனைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


* கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.* குறிப்பிட்ட கல்லூரி விடுதிகளை மட்டுமே திறப்பதுடன், குறைந்த மாணவர்களை மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும்.


* மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.


* கல்லூரிகள் திறக்கப்பட்டதும் வரும் விடுதி மாணவர்கள், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படவேண்டும்.


 அவர்கள் கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வந்தாலும் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்.


* ஒவ்வொரு அறையிலும் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும்.


~~ இவ்வாறு யுஜிசி கூறியுள்ளது.

No comments:

Post a Comment