உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு 29ம் தேதி சான்று சரிபார்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, December 21, 2020

உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு 29ம் தேதி சான்று சரிபார்ப்பு

 உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு 29ம் தேதி சான்று சரிபார்ப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:


 உதவி சுற்றுலா அலுவலர் மற்றும் தொல்லியல் அலுவலர் ஆகிய பதவிகள் தொடர்பான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.


 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே அனுப்பப்பட மாட்டாது.


 ‘சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு உரிய நாளில் விண்ணப்பதாரர் வர தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment