சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி, தங்குமிடம்: பாரதியார் பல்கலை. அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 23, 2020

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி, தங்குமிடம்: பாரதியார் பல்கலை. அறிவிப்பு

 சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி, தங்குமிடம்: பாரதியார் பல்கலை. அறிவிப்பு


பாரதியார் பல்கலை.யில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, வரும் 2021-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.


இதற்கான முழு நேர இலவசப் பயிற்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் பிப். 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 


இதற்காக மாணவ, மாணவிகள் வரும் ஜன. 30-ம் தேதி நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நுழைவுத்தேர்வு நடைபெறும்.


நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


 மாணவர்கள் அதைப் பதிவிறக்கம் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்து, கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், ரூ. 5-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட தபால் உரை ஆகியவற்றை “ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி இயக்குநர், அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம், நாச்சிமுத்து அரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46” என்ற முகவரிக்கு வரும் ஜன. 5-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.


நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, பயிற்சி, தங்குமிடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். தங்குமிடம் வெளி மாவட்ட மாணவர்கள் 60 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்’’.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment