மயிலாடுதுறை பழைய இரும்பு கடையில் ரைடு: கட்டுக்கட்டாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு புதிய புத்தகங்கள் பறிமுதல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 29, 2020

மயிலாடுதுறை பழைய இரும்பு கடையில் ரைடு: கட்டுக்கட்டாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு புதிய புத்தகங்கள் பறிமுதல்

 மயிலாடுதுறை பழைய இரும்பு கடையில் ரைடு: கட்டுக்கட்டாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு புதிய புத்தகங்கள் பறிமுதல்


மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் கட்டுக்கட்டாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 2,000 கிலோ எடையுள்ள 3,134 பாடப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


புத்தகங்களை விற்ற மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் மோகநாதன்(40), இரும்புக்கடை உரிமையாளர் பெருமாள்சாமி(56) ஆகியோர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


 மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து  வருவாய்த்துறையினர் மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 


மேலும் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் உள்ள புத்தக கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அரசு மாணவர்களுக்கு வழங்கும் புத்தகத்தை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment