மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 29, 2020

மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு

 மதிய உணவு திட்டத்தின் கீழ்  மாணவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு


தில்லியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.


தில்லி மண்டாவலி பகுதியில் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது


தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் வகையில், அவர்களது பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த தில்லி அரசால் திட்டமிடப்பட்டது


எனினும் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கரோனா பரவிவருவதால் பள்ளிகளை தற்போது திறக்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் அடுத்த 6 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கரோனா பரவலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

No comments:

Post a Comment