7.5 சதவீத இடம் ஒதுக்கீடு: 10 பேருக்கு மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 23, 2020

7.5 சதவீத இடம் ஒதுக்கீடு: 10 பேருக்கு மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு

 7.5 சதவீத இடம் ஒதுக்கீடு: 10 பேருக்கு மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு


நாமக்கல்: மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க, தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது.


 அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, அரசு பள்ளியில் படித்த, ஐந்து மாணவர், ஐந்து மாணவியர் என, மொத்தம், 10 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 


பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த பாலாஜி, 'நீட்' தேர்வில், 387 மதிப்பெண் பெற்று, மதுரை மருத்துவ கல்லூரி; திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மேகா, 366 மதிப்பெண் பெற்று, கோவை மருத்துவக் கல்லூரி; கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கவின்குமார், 252 மதிப்பெண் பெற்று, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.


 தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மல்லிகேஸ்வரி, 199 மதிப்பெண் பெற்று, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி; உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கவிஷ்குமார், 170 மதிப்பெண் பெற்று, திருவள்ளூர் இந்திரா மருத்துவக் கல்லூரி; ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரேணுகுமார், 146 மதிப்பெண் பெற்று, கோவை கே.எம்.சி.?ஹச்., மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


 பரமத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா, 163 மதிப்பெண்ணுடன், சென்னை மாதா மருத்துவக் கல்லூரி; மாணவி ஹரிணி, 199 மதிப்பெண் பெற்று, சென்னை தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி; வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி மணவர் பிரவீன், 158 மதிப்பெண் பெற்று, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக் கல்லூரி; திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளி மாணவி மயிலா, 140 மதிப்பெண் பெற்று, கே.எஸ்.ஆர்., பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment