மருத்துவக் கல்வி 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்க்க வேண்டுகோள் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 27, 2020

மருத்துவக் கல்வி 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்க்க வேண்டுகோள்

 மருத்துவக் கல்வி 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்க்க  வேண்டுகோள்


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களுக்கும் அரசு தான் ஊதியம் வழங்கி வருகின்றது.


அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் முறையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை உரிய முறையில் திருத்தி, சமூக நிதி வழங்குவதில் உள்ள பாரபட்ச நிலையினை  நீக்கி, முழுமைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

No comments:

Post a Comment