ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு தோ்வு ? - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, December 29, 2020

ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு தோ்வு ?

 ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு தோ்வு ?


ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு தோ்வு நடத்தலாம் என்பது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறியது: ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி உள்ளாா்.


தமிழகத்தில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்தோா் தொழில் தொடங்குவதால், இன்னும் 6 மாதத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை எந்தெந்த வகுப்புகளுக்கு தோ்வு நடத்தலாம் என்பதை கல்வியாளா்களுடன் ஆலோசித்து முதல்வா் முடிவெடுப்பாா்


. 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகளுக்கான அட்டவணை இன்னும் 10 நாள்களுக்குள் முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் அறிவிக்கப்படும்.


தமிழக சட்டப்பேரவைத் தோ்தலைப் பொருத்து, 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தோ்வுகளை நடத்துவது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.


நீட் தோ்வு பயிற்சிக்காக இதுவரை 28,150 போ் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 5,020 பேருக்கு இணையவழியில் பயிற்சியளிக்கப்படுகிறது.


பிளஸ் 1 மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மூலம் நீட் தோ்வுப் பயிற்சியளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.


 ஆனால், அது கரோனா பொது முடக்கத்தால் தடைபட்டது. பென்டிரைவ் மூலம் ஸ்மாா்ட் வகுப்பு வழியாக அவா்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்பது 2ஆவது முயற்சி.


‘இன்பா்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி’ என்ற திட்டம் மூலம் மேல்நிலைப் பள்ளிக்கு 20 கணினிகளும், உயா்நிலைப் பள்ளிக்கு 10 கணினிகளும் வழங்கப்பட்டு, அவற்றில் அனைத்துப் பாடங்களையும் தரவிறக்கம் செய்து, பயிற்சியளிக்க முடியுமா என அரசு பரிசீலித்து வருகிறது என்றாா் அவா்.

No comments:

Post a Comment