டிப்ளமா கல்வியியல் தேர்வு: 97 சதவீதம் பேர் 'பெயில்' - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 17, 2020

டிப்ளமா கல்வியியல் தேர்வு: 97 சதவீதம் பேர் 'பெயில்'

 டிப்ளமா கல்வியியல் தேர்வு: 97 சதவீதம் பேர் 'பெயில்'


தொடக்க கல்வி டிப்ளமா படிப்புக்கான தேர்வில் 97 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.


தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு டிப்ளமா கல்வியியல் படிப்பான டி.எல்.எட். படிப்பை முடித்தவர்கள் சேர்க்கப்படுவர். டி.எல்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வும் எழுதலாம்


.ஆனால் சமீப காலமாக டி.எல்.எட். முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் அதில் படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.


இந்நிலையில் 2019 ~ 20ம் கல்வி ஆண்டில் படித்தவர்கள் மற்றும் 'அரியர்' உள்ளவர்கள் என 7 000 பேருக்கு அரசு தேர்வு துறை வழியே தேர்வுகள் நடத்தப்பட்டன. சமீபத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழியாக இந்த முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.இதில் தேர்வு எழுதியவர்களில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment