உங்களுக்கு தெரியுமா? குடோனிலிருந்து நீங்களே சிலிண்டரை எடுத்து வந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்! - Minnal Kalvi Seithi

Breaking

Friday, December 25, 2020

உங்களுக்கு தெரியுமா? குடோனிலிருந்து நீங்களே சிலிண்டரை எடுத்து வந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்!

 உங்களுக்கு தெரியுமா? குடோனிலிருந்து நீங்களே சிலிண்டரை எடுத்து வந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும்!


வீடுகளில் ஊழியர்கள் மூலமாக டெலிவரி செய்யப்படக்கூடிய சிலிண்டர்களை நேரடியாக சென்று நாமே எடுத்து வந்தால் நமக்கு 19.50 பைசா கிடைக்கும்.


தற்போதைய காலத்தில் மின்சாரம் மூலமாகவே இயங்கக்கூடிய பல அடுப்புகள் வந்தாலும், கேஸ் அடுப்பு என்பது மக்களால் விரும்பப்படுவது மட்டுமல்லாமல் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகவும் உள்ளது.


 மானிய விலையில் வாங்கக்கூடிய சிலிண்டர்கள் வருடத்துக்கு 12 மட்டுமே கொடுக்கப்படுகிறது, அதற்க்கு அதிகமாக தேவைப்பட்டால் சந்தை விலையில் நாம் வாங்கி கொள்ளலாம். இந்த கேஸ் அடுப்புக்கான சிலிண்டர் முதலில் நாம் வாங்கிய பின்பு தீர்ந்து விட்டது என்றால் ஒரு போன் செய்ததும் நாம் வாடிக்கையாக வாங்கி வரும் நிறுவனங்களின் ஊழியர்கள் நமது வீட்டிற்கே வந்து சிலிண்டரை கொடுத்து விட்டு செல்வார்கள்.


 இவ்வாறு அவர்கள் டெலிவரி செய்வதற்கு 19.50 பைசா அவர்களுக்கு நமக்குத் தெரியாமல் மறைமுகமாக செல்கிறது. அதேசமயம் நீங்கள் ஆர்டர் செய்யக்கூடிய சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து குறித்த நேரத்திற்கு சிலிண்டர் டெலிவரி வரவில்லை என்றால் நீங்களே சென்று சில சமயங்களில் நேரடியாக அந்த சிலிண்டர்களை எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.


அப்படிப்பட்ட நேரத்தில் உங்களுக்கு அந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் பணம் கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் சிலிண்டர் நாம் வாங்கக்கூடிய ஏஜென்சியின் குடோனில் இருந்து நாமே சென்று சிலிண்டரை எடுத்து வரும் பொழுது அதற்காக நமக்கு 19. 50 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.


 இந்த தொகை சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படும் போதே டெலிவரி கட்டணமாக அதனுடன் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் நாம் டெலிவரி ஊழியர்கள் மூலம் வாங்காமல் நேரடியாக சென்று எடுக்கும் பொழுது இந்த பணம் நமக்கு கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இந்த பணம் நமக்கு கொடுக்கப்படவில்லை என்றால் 18002333555 இந்த எண்ணில் தொடர்பு கொண்டும் நாம் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment