ஜே.இ.இ., தேர்வு பயிற்சி :விண்ணப்பிக்க அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 20, 2020

ஜே.இ.இ., தேர்வு பயிற்சி :விண்ணப்பிக்க அழைப்பு

 ஜே.இ.இ., தேர்வு பயிற்சி :விண்ணப்பிக்க அழைப்பு


அடுத்தாண்டு நடக்கவுள்ள ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி பெற, இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்வு முகமை சார்பில், ஐ.ஐ.டி.,யில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ., நுழைவு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 


அடுத்தாண்டு நடத்தப்படவுள்ள தேர்வுக்கு, அரசு, உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது.நடப்பாண்டு, கொரோனா பரவலால், ஆன்லைனில் பயிற்சி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


அடுத்த மாதம், 4ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு துவங்குகிறது.பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல், வரும், 31ம் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 


கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும்.இத்தகவலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment