ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, December 21, 2020

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

 ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு


ஓய்வூதியம் பெறுகிறவர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருப்பதாவது: தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயம். 


ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை 2021ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி இடைவெளியில் சமர்ப்பிக்கலாம்.


தபால் அலுவலகங்களிலும், இணையதளம் மூலமாகவும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


 கிராமப்புறங்களில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு இது எளிதாக இருக்கும். இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. 


மேலும், சான்றிதழ் சமர்ப்பிப்பதில் பயோமெட்ரிக் முறையை தவிர்ப்பதற்காக காணொலி வழியே அடையாளத்தை உறுதி செய்யும் முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


 முகத்தை வைத்தே சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான தொழில்நுட்பமும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு ஆன்ட்ராய்ட் வசதி கொண்ட போன் போதும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment