அண்ணா பல்கலை எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, December 30, 2020

அண்ணா பல்கலை எச்சரிக்கை

 அண்ணா பல்கலை எச்சரிக்கை


அண்ணா பல்கலை பேராசிரியர் பதவிக்கு, இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என, பல்கலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.


பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர் பதவி தொடர்பாக, சிலர் புகார்கள் அளித்துள்ளனர்.


 பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தேர்வு பட்டியலில், பெயர்களை இடம் பெற செய்து, பணி நியமனம் பெற்று தருவதாக, சில அதிகாரப்பூர்வமற்ற நபர்கள், குறிப்பிட்ட நபர்களை அணுகியுள்ளதாக, புகார்களில் கூறப்பட்டுள்ளன.அந்த நபர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பல்கலை முடிவு செய்து உள்ளது.


எனவே, பல்கலையின் பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அடையாளம் தெரியாத, அதிகாரப்பூர்வமற்ற நபர்களின் தொலைபேசி மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம்.இந்த மோசடி பேர்வழிகளின் நடவடிக்கைகளுக்கு, பல்கலையானது எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment