தனியார் இணையதளம் மூலம் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெற்றுள்ள இளைஞர்கள் விவரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 29, 2020

தனியார் இணையதளம் மூலம் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெற்றுள்ள இளைஞர்கள் விவரம்

 தனியார் இணையதளம் மூலம் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெற்றுள்ள இளைஞர்கள் விவரம்


தமிழகத்தில் 16,089  பேர் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 16,089 பேர் தற்போது வரை வேலை பெற்றுள்ளதாகவும் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குனர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளளார். 


காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் அரசு தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தப்படுகிறது.


 இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிகின்றனர். தொழிற்சாலை ஊழியர்கள், இளைஞர்களுக்கு சிறப்பு இரவு நேர பயிற்சி மையம் செயல்படுகிறது.


கடந்த முறை, குரூப் 4 சர்வீஸ் தேர்வுக்கு இங்கு பயிற்சி பெறற்ற 21 மாணவர்கள் வெற்றி பெற்று பல துறைகளில் தேர்வாகியுள்ளனர். 


அவர்களுக்கு, தமிழக வேலைவாய்ப்பு துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குனர் வீரராகவ ராவ் நேற்று, காஞ்சிபுரம் பயிற்சி மையத்தில் நடந்த விழாவில், நினைவு பரிசு வழங்கினார்.


 பின்னர் அவர், செய்தியாளரிடம் கூறுகையில், தமிழக வேலைவாய்ப்புத்துறை மூலம் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வேண்டுவோர், சிறப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை எடுக்கப்பட்டது. 


அதில், தற்போது வரை 89,324 பேர் வேலை வேண்டி பதிவு செய்துள்ளனர். 16,089 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை அளிக்க முன்வந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment