கல்லூரிகளில் நேரடி வகுப்பு: அதிகாரிகள் ஆலோசனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 24, 2020

கல்லூரிகளில் நேரடி வகுப்பு: அதிகாரிகள் ஆலோசனை

 கல்லூரிகளில் நேரடி வகுப்பு: அதிகாரிகள் ஆலோசனை


கல்லூரிகளில் இறுதியாண்டு மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.


தமிழகம் முழுவதும், பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. ஒன்பது மாதங்களுக்கு பின், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.


இந்நிலையில், ஜனவரி முதல் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளை துவங்கலாமா என்பது குறித்து, கல்லூரி கல்வி இயக்ககத்தின் மண்டல அதிகாரிகள் தரப்பில், கருத்துக்கள் பெறப்பட்டு, உயர்கல்வி துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.


ஜனவரியில், கல்லூரிகளை துவங்குவது குறித்து, அறிவிப்பு வெளியாகவிருந்த நிலையில், திடீரென பிரிட்டன் நாட்டில் பரவும், உருமாறிய கொரோனா தொற்றால், முடிவுகள் எடுப்பது தள்ளிப் போயுள்ளது


.வரும், 31ம் தேதி வரையிலான நிலவரங்களை ஆய்வு செய்து, சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெற்று, கல்லூரிகளை திறக்கலாமா என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


இதுகுறித்து, இம்மாத இறுதியில், உரிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment