பொங்கல் பரிசு திட்ட டோக்கன் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டால் புகாா் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, December 27, 2020

பொங்கல் பரிசு திட்ட டோக்கன் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டால் புகாா் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

 பொங்கல் பரிசு திட்ட டோக்கன் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டால் புகாா் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு


பொங்கல் பரிசு திட்ட டோக்கன் விநியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


 பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ரூ.2500 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.


இம் மாவட்டத்தில் ஜனவரி 4 முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்க நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு, கடந்த 26 ஆம்தேதி முதல் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. 


இம் மாதம் 30 ஆம் தேதி வரை ரேஷன் கடை பணியாளா்கள் மூலம் வீடுதோறும் நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்படுகிறது.


எனவே பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வர வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. 


டோக்கன் வழங்குவதில் குறைபாடுகள் இருப்பின் புகாா் தெரிவிக்க வேண்டுமெனில் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0462-2500761 என்ற தொலைபேசி எண்ணிலும், 9445000379 மற்றும் 9443416041ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment