டி.என்.பி.எஸ்.சி., எண்ணுடன் ஆதார் இணைப்பால் அவதி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 24, 2020

டி.என்.பி.எஸ்.சி., எண்ணுடன் ஆதார் இணைப்பால் அவதி

 டி.என்.பி.எஸ்.சி., எண்ணுடன் ஆதார் இணைப்பால் அவதி


டி.என்.பி.எஸ்.சி., எண்ணுடன் ஆதார் இணைப்பால் தேர்வர்கள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி.,யில் நிரந்தர பதிவு எண் பெற்றவர்கள் அத்துடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


 இதற்கு ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் குரூப்~ 1 தேர்வுக்கு சில நாட்களே உள்ள நிலையில் சில சிக்கல்கள் உள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.சிலர் ஆதாருடன் அலைபேசி எண் இணைக்காமல் உள்ளனர்.


 இதனால் ஓ.டி.பி., பெறமுடியவில்லை. ஆதார் பதிவில் உள்ள பெயர்கள், டி.என்.பி.எஸ்.சி., நிரந்தரப்பதிவில் உள்ள பெயர்களுடன் மாறுபாடு உள்ளது.


இதனை உடனடியாக திருத்தம் செய்ய இயலாத நிலை எற்படுகிறது.குரூப் 1 தேர்விற்கு படிக்கும் நேரத்தில் ஆதார் திருத்தத்திற்காக சென்று அவதிப்படும் நிலை எற்படுகிறது. ஆதார் எண் இணைப்பில் இடர்பாடுகள் ஏற்படுவதால் குரூப்~ 1 முதன்மைத் தேர்வுக்கு தற்காலிக விலக்கு அளிக்கலாம் என, பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment