அரசு டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, December 31, 2020

அரசு டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க உத்தரவு

 அரசு டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க உத்தரவு


ரேஷன் கடைகளை நடத்தும் நிறுவனங்கள் வழங்கும், டோக்கனுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு வழங்க வேண்டும்' என, உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 


அதை வாங்க, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற, 'டோக்கன்' கார்டுதாரர்களின் வீடுகளில் வழங்கும் பணியில், டிச., 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடைகளின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


அதற்கு மாற்றாக, சில ஆளுங்கட்சியினர், தங்கள் புகைப்படத்துடன் கூடிய, டோக்கனை வழங்கினர்.அதை எதிர்த்து, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 விசாரணையின் போது, அரசு தரப்பில், 'அதிகாரப்பூர்வ டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே, பரிசு பொருள் வழங்கப்படும்' என, சுற்றறிக்கை அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


அதை தொடர்ந்து, உணவு வழங்கல் துறை ஆணையர், 'வெளி நபரால், டோக்கன் வழங்க அனுமதியில்லை.


 கடை நடத்தும் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படும், டோக்கனுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும்' என, கலெக்டர்கள், வாணிப கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment