கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் யோகாசனம் : உலக சாதனை படைத்த 10 வயது சிறுமி!! - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 17, 2021

கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் யோகாசனம் : உலக சாதனை படைத்த 10 வயது சிறுமி!!

 கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் யோகாசனம் : உலக சாதனை படைத்த 10 வயது சிறுமி!!


விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது மாணவி கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் பேரண்டாசம் செய்து குளோவல் வேல்டு ரெகார்டில் இடம்பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ். கொடிக்குளம் பகுதியை சேர்ந்த சீன்ராஜ், கண்ணாத்தாள் தம்பதியினரின் மகள் 10 வயதான யோகவீணா. இவர் கூமாப்பட்டி தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.


இந்நிலையில் கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் கண்ணாடி மீன் தொட்டிக்குள் கண்ட பேரண்டாசனாவை தொட்டியை மூடிய நிலையில் 10 நிமிடம் செய்து அசத்தியுள்ளார்.


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குளோபல் உலகசாதனை கமிட்டியினர் இவரது சாதனையை பாராட்டி யோகவீணாவுக்கு குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு எனும் சாதனையாளர் பட்டத்தை வழங்கி சான்றிதல் மற்றும் பதக்கம் வழங்கினர். இதற்கு முன்பு 8 நிமிடம் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment