அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையுடன் வந்த 10-ஆம் வகுப்பு மாணவி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 13, 2021

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையுடன் வந்த 10-ஆம் வகுப்பு மாணவி

 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையுடன் வந்த 10-ஆம் வகுப்பு மாணவி


மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக 10-ஆம் வகுப்பு மாணவி தமது காளையுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தமிழர் திருநளையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 


இன்று காலை தொடங்கிய இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு வாடிவாசல் வழியாக வரும் காளைகளை அடக்கி வருகின்றனர்.


இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள், 430 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.


இதனிடையே மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி யோகேஸ்வரி, தமது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார்.


போட்டியில் கலந்துகொள்ள 'மட்டை' என்ற தனது காளையை வாடிவாசலுக்கு மாணவி அழைத்துச் சென்றார்

No comments:

Post a Comment