கேட் 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு: IIM இந்தூர் வெளியிட்டது - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 2, 2021

கேட் 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு: IIM இந்தூர் வெளியிட்டது

 கேட் 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு: IIM  இந்தூர் வெளியிட்டது


ஐஐஎம் கேட் தேர்வு முடிவுகளை இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனம் இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ளது.


தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் சேர கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு, நாடு முழுவதும் நவம்பர் 29-ம் தேதி நடைபெற்றது


இந்தத் தேர்வு 159 நகரங்களில் 430 தேர்வு மையங்களில் 3 ஷிஃப்டுகளில் நடைபெற்றது


. கேட் தேர்வை சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுதினர். கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு 96.15 சதவீதத் தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டன.


 இதற்கிடையே தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியலைக் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஐஐஎம் இந்தூர் வெளியிட்டது.


இதை அடுத்து, ஜனவரி முதல் வாரத்தில் கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


 இந்நிலையில் கேட் தேர்வு முடிவுகளை இந்தூர் இந்திய மேலாண்மை நிறுவனம் இன்று (ஜனவரி 2) மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது.


https://iimcat.ac.in 


என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம்


வழக்கமாக தேர்வு நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும். இம்முறை தேர்வு நடைபெற்ற ஒரு மாதத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment