இந்திய குடிமை பணித்தேர்வு நுழைவு தேர்வு 24ம் தேதி நடக்கிறது - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

இந்திய குடிமை பணித்தேர்வு நுழைவு தேர்வு 24ம் தேதி நடக்கிறது

 இந்திய குடிமை பணித்தேர்வு நுழைவு தேர்வு 24ம் தேதி நடக்கிறது


அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு 24ம் தேதி 16 மையங்களில் நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ம் ஆண்டில் மத்திய தேர்வாணையக் குழு நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுத அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் தேர்ந்து பயிற்சி பெற ஆர்வமிக்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது.


 இதன்படி 6699 விண்ணப்பங்கள் பெறப்பட்டன இதற்கான நுழைவுத் தேர்வு 16 மையங்களில் 24ம் தேதி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. இத்தேர்வில் முறைகேடுகள் தடுக்க பறக்கும் படைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment