பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு: கல்வித்துறை உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு: கல்வித்துறை உத்தரவு

 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு: கல்வித்துறை உத்தரவு


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் இதுவரை எந்த அளவுக்கு அடைவுத்திறன் பெற்றுள்ளனா் என்பதை அறியும் வகையில், ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு ‘எமிஸ்’ தளம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.


இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு எந்தெந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஆசிரியா்கள் தெரிந்து கொள்ள முடியும்


இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் மாணவா்களின் கற்றல் அடைவு பாதிக்காத வகையில் பள்ளிக் கல்வித்துறை முன் முயற்சிகளை மேற்கொண்டது. 


அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினிகளில் காணொலிகள் பதிவேற்றம், கல்வித் தொலைக்காட்சி மற்றும் சில தனியாா் தொலைக்காட்சிகளில் பாடம் சாா்ந்த காணொலிகள் ஒளிபரப்பு செய்தல், விரைவு குறியீடுகளுடன் (க்யூஆா்) கூடி பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் மாணவா்களின் கற்றல் அடைவுக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.


தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் இதுவரை எந்த அளவுக்கு அடைவுத்திறன் பெற்றுள்ளாா்கள் என்பதை அறிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் அவா்களுக்கு எந்தெந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியா்கள் திட்டமிடுவது அவசியமாகும். இதற்காக ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.


இந்த மதிப்பீடானது ‘எமிஸ்’ தளம் மூலமாக பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வக வசதியைப் பயன்படுத்தி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவை மூலமாக வெள்ளிக்கிழமை முதல் நடத்தப்படவுள்ளது. மதிப்பீடு செய்வது சாா்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 


முதன்மைக் கல்வி அலுவலா்கள் இது சாா்ந்து தனிக்கவனத்துடன் செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment