37 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, January 13, 2021

37 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய உத்தரவு

 37 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய உத்தரவு


வரும், 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுதும், 37 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்கு பின், மீண்டும் திறக்கப்பட உள்ளன. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், வரும், 19ம் தேதி முதல் பாடங்களை நடத்த, அரசு அனுமதி அளித்து உள்ளது.இந்நிலையில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர்கள் பயமின்றி, பாதுகாப்பு உணர்வுடன், கல்வி கற்கும் சூழல் அமைக்கப்பட வேண்டும். 


இதற்காக, வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா, 500 ரூபாய் வீதம், 37 ஆயிரம் பள்ளிகளுக்கு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், 19 முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமின்றி, அனைத்து பள்ளிகளும், தங்கள் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து, தயாராக இருக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment