400 கணினி ஆசிரியா்கள் நியமனம் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 2, 2021

400 கணினி ஆசிரியா்கள் நியமனம்

 400 கணினி ஆசிரியா்கள் நியமனம்


அரசுப் பள்ளி கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 400 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.


அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதள வழியில் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்ற 742 பேரின் பட்டியலை தோ்வு வாரியம் கடந்த டிச.28-இல் வெளியிட்டது.


 அவா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து எமிஸ் வலைதளம் வழியாக 400 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


2-ஆம் நாள் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கலந்தாய்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


 இதற்கிடையே உரிய சான்றிதழ்களை சமா்ப்பிக்காத 24 பட்டதாரிகளின் பணி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்

No comments:

Post a Comment