புத்தக அறிமுகம்: தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, January 3, 2021

புத்தக அறிமுகம்: தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு

 புத்தக அறிமுகம்: தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு


தமிழ் மொழியை எளிதாக கற்பிக்கும் வகையில் நுட்பமாக ஆய்வு செய்து, உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். பெற்றோரும், ஆசிரியரும் பயன்படுத்த தக்க வகையில் உள்ளது. 


பின்தங்கிய கிராம அரசுப்பள்ளி மாணவ -மாணவியரிடம் சோதனை முறையில் அமல்படுத்தி, மேம்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரியின் பாராட்டும் பெற்றுள்ளது.



தாய்மொழி கற்பித்தலில், பெற்றோர், ஆசிரியருக்கு உள்ள பங்கை துல்லியமாக உணர்த்தி, எளிய அணுகு முறையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன.


 புரிந்து கற்க ஏதுவாக, 45 நாட்களுக்கு சிறப்பு பாடங்கள் உள்ளன. வலிந்து கற்பிக்கும் முறையை முற்றாக நிராகரித்து, சூழலுடன் தொடர்புபடும் வகையில் உள்ளது.



மொழி பயிற்சி விளையாட்டு, சொற்றொடர் பயிற்சி விளையாட்டு என நிகழ்த்துதல் வழி பாடங்கள் உள்ளன. சிறுவர் - சிறுமியரின் ஆர்வத்தை துாண்டும் வகையில் அமைந்துள்ளது


. அதன் ஊடே, இலக்கண மரபுகள் புரியும் வகையில் கூறப்பட்டுள்ளன.

ஐம்புலன்கள் சார்ந்த பயிற்சியே மொழியை முழுமையாக்கும் என்ற கருத்து நிரம்பியுள்ளது.


 உச்சரிப்பு முதன்மை படுத்தப்பட்டுள்ளது. பாடல்களுக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வட்டாரக் கதைப்பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. 


மொழியை முறைப்படி கற்பதால் ஏற்படும் பயன் விளக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் பயிற்சி பெற, 45 நாட்கள் போதும் என்ற ஆசிரியரின் துணிச்சல், புத்தக பக்கங்களில் மிளிர்கிறது. அதற்கான முழு உழைப்பையும் செலுத்தியுள்ளார்.


 கருத்துக்கள் சிறு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன.

அடிப்படை திறன்களான, கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றுக்கு தனித்தனியாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


 அவற்றை வளர்க்கும் முறைகள், வளர்ப்பதால் ஏற்படும் பயன்கள் என விளக்கப்பட்டுள்ளது.

சிறுவர் - சிறுமியருக்கு எளிதாக பெற்றோரே கற்பிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகம். தமிழ் மொழி கற்பித்தலில் புதிய அணுகுமுறையுடன் வந்துள்ளது


ஆசிரியர்: முனைவர் மு.கனகலட்சுமி

வெளியீடு: சிவசக்தி பதிப்பகம்


4, முனியாண்டி மேற்கு சந்து,

வடக்கு தெரு, ராமநாதபுரம்.

அலைபேசி: 93455 71942

பக்கம்: 180 விலை: ரூ.500

No comments:

Post a Comment