பள்ளிக்கு ரூ.500 ஒதுக்கீடு - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 13, 2021

பள்ளிக்கு ரூ.500 ஒதுக்கீடு

 பள்ளிக்கு ரூ.500 ஒதுக்கீடு


கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், ஜன., 19ம் தேதி திறக்கப்படுகிறது.


இந்நிலையில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா, 500 ரூபாய் வீதம், 37 ஆயிரம் பள்ளிகளுக்கு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டுமின்றி, அனைத்து பள்ளிகளும், தங்கள் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து, தயாராக இருக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment