கல்வியை ஊக்கப்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி நிதியுதவி:மத்திய இணை அமைச்சர் - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 3, 2021

கல்வியை ஊக்கப்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி நிதியுதவி:மத்திய இணை அமைச்சர்

 கல்வியை ஊக்கப்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி நிதியுதவி:மத்திய இணை அமைச்சர்


மத்திய அரசு இந்த ஆண்டு கல்வியை ஊக்கப்படுத்த ரூ.60 ஆயிரம் கோடியில் நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் இந்த ஆண்டு துவங்கபட உள்ளதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம்பிரகாஷ் கூறினார்.


வேலூர்மாவட்டம்,அரியூர் தங்ககோவில் வளாகத்தில் சக்தியம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது இதில் மத்திய வணிக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் ஆந்திர மாநில ஊரக வளர்ச்சி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ராமசந்திர ரெட்டி.மடாதிபதிகள் கோவை சிவலிங்கசுவாமிகள் ,தன் வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.


முன்னதாக ஊர்வலமும் நடைபெற்றது இதில் ஆயிரகணக்கான பெண்கள் கலந்துகொண்டனர் இதில் மத்திய தொழில்துறை மற்றும் வணிகவரித்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பேசுகையில் இந்த தங்ககோவில் நிர்வாகம் மாணவர்களுக்கு கல்வி பயில கல்வி உதவிதொகைகள் இலவச சைக்கிகள் வழங்குதல் உள்ளிட்டவைகளை ஆயிரக்கணக் கானோருக்கு வழங்கி வருகின்றனர் .


இது சுற்றுசூழலுக்கும் நாட்டிற்கும் வழிகாட்டியாக உள்ளது. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு இந்த ஆண்டு கல்வி பெறுவதை ஊக்கபடுத்தும் நோக்கத்தோடு புதியதாக கல்வி உதவி வழங்கும் திட்டத்தை துவங்கவுள்ளோம் இதற்கு ரூ.60 ஆயிரம் கோடி நிதியை வழங்கவுள்ளோம் தற்போது நாட்டு மக்கள் இந்த அரசால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பயன்பெறுகிறார்கள் என்று பேசினார்.

No comments:

Post a Comment