8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 17, 2021

8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பிப்ரவரி 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.


 இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. மாணவர்களின் விவரங்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த 12ம் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவேற்ற தேர்வுத் துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது என்எம்எம்எஸ் தேர்வு விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment