மே 9-ல் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு: மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 5, 2021

மே 9-ல் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு: மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்

 மே 9-ல் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு: மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம்


நாடு முழுவதும் 'கிளாட்' எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு மே 9-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


நாடு முழுவதும் இயங்கும் 22 தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியச் சட்டக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை சட்டப் படிப்புகளில் சேர 'கிளாட்' (Common Law Admission Test-CLAT) எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது


இந்த நுழைவுத்தேர்வு, ஆங்கில அறிவு, பொது அறிவு மற்றும் நடப்புக் கால நிகழ்வுகள், கணிதம், சட்ட அறிவு , பகுத்தாராயும் திறன் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.


இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு மே 9ஆம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரை தேர்வர்கள் ஆன்லைனில்


 consortiumofnlus.ac.in


 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


இளங்கலை சட்டப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி அவசியம். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் என்றால் 40 சதவீத மதிப்பெண்கள் போதுமானவை. வயது வரம்பு 22. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு உண்டு.


முதுகலை சட்டப் படிப்பைப் பொறுத்தவரையில், 50 சதவீத மதிப்பெண்களுடன் சட்டத்தில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 45 சதவீத மதிப்பெண்கள் போதும். இதற்கு வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment