'வாட்ஸ் ஆப்' கொள்கை மத்திய அரசு ஆய்வு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 14, 2021

'வாட்ஸ் ஆப்' கொள்கை மத்திய அரசு ஆய்வு

 'வாட்ஸ் ஆப்' கொள்கை மத்திய அரசு ஆய்வு


பயனாளிகளின் தகவல்களை பரிமாறும் வகையில் 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தளத்தின் தனிநபர் தகவல் பாதுகாப்பு எனப்படும் 'பிரைவசி' கொள்கை மாற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொள்கை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.


அமெரிக்காவைச் சேர்ந்த 'பேஸ்புக்' சமூக வலை தளம் நிறுவனத்தின் துணை அமைப்பான 'வாட்ஸ் ஆப்' சமூக வலை தளம் சமீபத்தில் தனது பிரைவசி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது


.அதன்படி 'தனது சேவையைப் பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிப். 8ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வாட்ஸ் ஆப் சமூக வலை தளத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது


.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மாற்று சமூக வலை தளங்களை மக்கள் நாடி வருகின்றனர்.இதையடுத்து புதிய கொள்கை குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்தது.


நம் நாட்டில் வாட்ஸ்ஆப் சமூக வலை தளத்தை 40 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அந்த நிறுவனத்தின் புதிய கொள்கையால் ஏற்பட உள்ள தாக்கம் குறித்து மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தேவைப்பட்டால் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment