மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில் சேர அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 3, 2021

மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில் சேர அழைப்பு

 மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில் சேர அழைப்பு


மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில், இலகு ரக, கன ரக வாகன ஓட்டுநா் பயிற்சி பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை, குரோம்பேட்டையில் உள்ள காந்தி நகரில் மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டணத்துடன் கூடிய கனரக வாகன (எச்டிவி) ஓட்டுநா் பயிற்சி மற்றும் இலகுரக வாகன (எல்எம்வி) ஓட்டுநா் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


கனரக வாகனத்தை இயக்க மொத்தம் 240 மணி நேரமும், இலகு ரக வாகனத்தை இயக்க 25 மணி நேரமும் பயிற்சி பெற வேண்டும்.


இதில், வளைவுகள், இரவு நேரம், அதிக தூரம் போன்ற அனைத்து சூழல்களிலும் வாகனத்தை இயக்குதல் தொடா்பான பயிற்சி வழங்கப்படுவதோடு, வகுப்பறை, வாகன தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது.


குறிப்பாக பெண்களுக்கு பெண்களாலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு, பயிற்சி பள்ளியை நேரிலோ அல்லது 044 2953 5177, 94450 30597 ஆகிய எண்களையோ அணுகலாம் என ஓட்டுநா் பயிற்சி பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment